பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. நிலையும் நினைப்பும் குருடாகுமே. கால் முடமாகுமே என்று யோசிக்கா மல், கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதன சங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல்நாட்டார்கள். எனவேதான் அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்று கிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரி கிறது. அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார் கள். இவர்கள் எந்த சாதனத்தைக் கண்டு பிடிக் கவும் கஷ்டப்படவில்லை; கஷ்டப்படாமல் சுகம் எப்படித் தெரியும். ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில் ஏரோப்பிளேன் கண்டு பிடித்தவர்க ளுடையப் பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடையப் பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிக்கட்டிபோல, குருடனிடம் காட்டிய முத்து மாலையைப் போல, செவிடன் கேட்ட சங் கீதம்போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது. மதிப்புற்றிருக்க வேண்டிய பொருள் மதிப்பற் றிருப்பது நல்லதல்ல. விஞ்ஞானம் மதிப்புப் பெற மாணவர்கள் உழைக்கவேண்டும். மாணவர்கள் மக்களிடம் சென்று அவர்கள் மனதிலே உள்ள' மாசை நீக்கவேண்டும். மனதிலுள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டுப் பிறகு விஞ்ஞானத் தைப் பற்றி பிரசாரம் செய்யவேண்டும். அப் பொழுதுதான மக்கள் மனம் தெளிவடைவர்; அறிவைப் போற்றுவார்கள்; அஞ்ஞானத்தைக் கைவிடுவார்கள் உண்மையை நம்பு பார்கள். பொய்யை நம்பமாட்டார்கள்.