பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாத்துரை 47 இதுவரை நான் பொதுவாக இந்தியா- குறிப் பாக-தமிழ்நாட்டு மக்கள் நினைப்பு, நிலை உயர்ந்த அளவுக்கு உயரவில்லை. தாழ்ந்திருக்கிறது என் பதையும், தாழ்ந்ததை உயர்த்த பகுத்தறிவுப் பிரசாரம் என்ற ஒரே மார்க்கம்தான் உண்டென். றும், மாணவர்கள் கான் அம்மார்க்கத்தைக் கடைப் பிடிக்கத் தகுதியானவர்கள் என்றும், உடனே சர்க்கார் மக்களுக்கு மாணவர்கள் அந்தப்பணியை வெற்றிகரமாக செய்துமுடிக்க ஓர் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் கூறினேன். ஆகையால் சர்க் கார் பகுத்தறிவுப் படையைக் கிளப்பவேண்டும்; அந்தப் படையைத் தடையில்லாமல் இந்தப் பல் கலைக் கழகம் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படை இங்கு உண்டு. அப்படையினர் நன்கு. படித்தவர்கள், பண்புள்ளவர்கள், நல்ல பிரசாரப் பழக்கமுள்ளவர்கள்; பகுத்தறிவை ஆயுதமாக உடையவர்கள்; பயமறியா தவர்கள். இவர்களால்த் தான் வீழ்ந்த சமுதாயத்தை உயர்த்த முடியும். இதுதான் ஒரே படை, இதுதான் கடைசிப்படை. இப்படை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. "இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் என்ற மனோன்மணி ஆசிரியர் சுந்தரம்பிள்ளை மணி மொழியைக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.