பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.29 சி.என். அண்ணுத்துரை களிடம் படிப்பு இல்லை. படித்தவர்களிடம் பண்பு இல்லை. இன்று, சொல்லித்தரப்படுகிற பாடமுறையே மாற்றி அமைக்கப்பட வேண்டும். சிந்தனையைக் கிளறும்படியான எந்தத் திட்டமும் நம் கையில் இல்லை. எ ஜெர்மனி நாட்டில் ஹிட்லர் தம் ஆட்சி யில் கல்வித்துறையில் புகுத்திய புதிய முறைதான். பிள்ளைப் பருவத்திலேயே ஜெர்மானிய நாட்டு இளை ஞர்களுக்கு ஹிட்லர் பக்தியும் இராணுவத்தினிடம் மரியாதையும், காசிசத்திடம் (Nazism) நம்பிக்கையும், கொள்ளச் செய்தது. நாமும்தான் பிள்ளைகளுக்குக் கணக்குப் போடுகிறோம். நமது பிள்ளைகளிடம் " நான் நான்கு மாம்பழங்கள் வைத்திருந்தேன். அதை இரண்டு பேருக்குக் கொடுத்தால் ஆளுக்கு எத்தனை மாம் பழம்?' என்று கணக்கு போடுவோம். பிள்ளைகளோ மாம்பழம் ஆளுக்கு எத்தனை என்று யோசிப்பதைவிட மாம்பழத்தின் ருசி எப்படியிருக்கும் என்று யோசிப் பதில் நினைப்பை அதிகமாகச் செலுத்துவார்கள். ஆனால் இப்படியல்ல. ஜெர்மனியில் பிள்ளைகளுக்குக் கணக்குப் போடுவது. 4 டாங்கிகள் தான் நம்மிடம் இருக்கின்றன. எதிரியிடம் 8 டாங்கிகள் இருக்கின் றன. எப்படி இந்த 4 டாங்கிகளைக் கொண்டு எதிரி யைத் தோற்கடிப்பது என்ற முறையில் கேள்வி இருக் கும். இன்னும் நிமிடத்திற்கு அறுபது மைல் வேகத் தில் செல்லும் விமானம், காலை? மணிக்கு இங்கிருந்து கிளம்பி இலண்டனில் குறித்த இடத்தில் குண்டு வீசி விட்டு வரவேண்டுமானால் எத்தனை மணி பிடிக்கும் என்று கேள்வியிருக்கும். இத்தகைய கேள்விகள்தான் ஜெர்மானிய நாட்டில் இளைஞர்களுக்கு இராணுவத் f