பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலையும் நினைப்பும் 30, திடம் ஆசையையும் நாசிசத்திடம் விசுவாசத்தையும் கொடுத்தன. இதைப்போல இராணுவப் படிப்பை, ஹிட்லர் கையாண்ட நாசிச முறையை நாம் கல்வியில் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கூறவரவில்லை. கல்வித்துறையில் போதனை மூலம் மக்களுடைய மனதை எப்பக்கத்திலும் திருப்பலாம் என்பதை வலி யுறுத்தவே இதை நான் எடுத்துக்காட்டினேன். பாடத் திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்த் தான் மக்களுக்குப் பழமையினிடத்திலுள்ள பாசம் குறையும். மனத்திலுள்ள மாசு நீங்கும், காலத்திற் குத் தக்கதுபோல கருத்து வளரும். அப்பொழுது மக்கள் உணவுப் பஞ்சத்தால் மடியும்பொழுது சாந்தி பருவ ஆராய்ச்சி நடக்காது. மழையைப் பற்றி ஆராய்ச்சி நடக்கும். சொற்பக் காலத்தில் விளையக் கூடியப் பயிர்களைப்பற்றி ஆராய்ச்சி நடக்கும். ஆனால் பகுத்தறிவு, பாடப் புத்தகங்களில் நுழைவதை சர்க் கார் தடை செய்தால் நிச்சயம் சாந்தி பருவ ஆராய்ச்சி தான் நடக்கும். மேல்நாட்டார் நம் நினைப்பைக் கண்டு நகைப்பர்: பரந்த தேசம்: மூன்று பக்கமும் கடல்கள்; ஒரு பக்கம் உலகம் போற்றும் இமயம். நாற்பது கோடிக்குமேல் மக்களைக்கொண்ட நாடு; மும்மூர்த்தி கள் தோன்றிய நாடு ; நால்வர் ஆழ்வாராதிகள் அவ தரித்த புண்ணிய பூமி; இருந்தும் பஞ்சம். பட்டினியால் வாடுகிறார்கள்; சிலர் இறக்கிறார்கள். சர்க்காரோ சாந்தி பருவ ஆராய்ச்சி செய்கிறார்கள். தொழிற்சாலைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. விஞ் ஞானத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்கள்