பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சி என். அண்ணுத்துரை வதில் வர்ண ஜாலத்தைக் காண்பிப்பான். பொம்மை கள் கலைத்திறனைப் பேசுகிற அளவுக்குத் தன் கைத் திறனை எல்லாம் செலவழிப்பான். இவ்வள வும் செய்து விட்டு அவன் பேசாமல் குடிசைக்குள் குனிந்து செல்லு வான் தான் ஏன் மாடிவீட்டில் வாழக்கூடாது-ஒருநிமி டமேனும் அதைப்பற்றி நினைக்கமாட்டான். காரணம் மாடிகள் கட்டி, மாடி ஏறப்படிக்கட்டுகள் அமைத்து. படிக்கட்டுகள் வழியாக மாடி ஏறினால் மனதைக் கவர அழகான பொம்மைகள் வைத்து, ஆபத்துக்கிடையே வெய்யிலால் நெற்றியில் வழியும் வியர்வையைப் பார்க் காமல் கஷ்டப்பட்டு கட்டிடம் கட்டியும் கடைசியில் அந்த உப்பரிகையில் உல்லாசமாக உலவப்போகிறவன் ஒரு சீமான் ; அவனல்ல, இந்த உண்மையை தொழி லாளியும் அறிவான். மாடிப்படிக்கட்டுகளை கட்டும் பொழுது, அதன் வழியாக ஏறி உலவப் போகிறவன் வேறொருவன்; தானல்ல என்பதைக் தெரிந்துகொண்டு தான் கட்டுவான்.நிலைக்கேற்ற நினைப்பில்லை. திருட்டுத் தனமாகக் கனிதேடி மரம் ஏறியவனுடைய நினைப்பு எப்படியிருக்கும்? எந்த அளவுக்கு அவன் நிலை உயர்ந் திருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் நினைப்பும் தாழ்ந் திருக்கும். முதலில் கனி பறித்து, பிறகு அவசர அவ சரமாகத் தோட்டத்துக்குச் சொந்தக்காரன் வந்துவிடு வானோ, வந்துவிட்டால் என்ன செய்வானோ என்ற பயத்தில் செங்காய்களைப் பறித்து, அதன் பின் காய் களையும் பறிப்பான்.கனி பறிக்கையில் அவனது பாரத் தால் மரம் குலுங்கும்பொழுதெல்லாம் அவன் மனம் பயத்தால் குலுங்கும். அடிக்கடி தோட்டத்துக்குச் சொந்தக்காரன் வந்தால் எப்படிக் குதித்து எங்கு ஓடு