பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையும் நினைப்பும் 6 வது என்று நினைப்பான். அவன் இருப்பது மரத்தின் உச்சியில் ; ஆனால், அவன் மனம் இருப்பது தரையில்; இங்கும் நிலைக்கேற்ற நினைப்பில்லை. காரணம்.எப்படி மூன்றாவது அடுக்கு மாடியில் உலவும் தொழிலாளிக்கு அந்த மாடி வீடு சொந்தமில்லையோ, அதுபோல மர உச்சியில் கனி பறிப்பவனுக்கும் அந்த மரம் சொந்த மில்லை. இதேபோலத்தான் ஒரு நாட்டினுடைய நிலையும் நினைப்பும். ஒரு நாட்டின் நினைப்பைப் பார்த்துத்தான் அந்நாட்டின் நிலை மதிப்பிடப்படும். மக்களுடைய நினைப்புகளின் மொத்தமே (கூட்டுத் தொகையே) ஒரு நாட்டின் நினைப்பாகும் என்பதை ஒரு கணம் ஞாபகப் படுத்தி கொள்ளவேண்டும். இப்பொழுது இந்தியா என்னும் துணைக் கண்டம் அதற்குரிய மக்களால் ஆளப்படுகிறது. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப் பது இந்தியர்களே என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டை ஈடேற்றும் எந்தத் திட்டம் செல்வாக் குப்பெற ஆரம்பித்தாலும், அதற்கு எந்த ஆங்கிலர் தடைக்கல்லாய் இருப்பதாகச் சொல்லப்பட்டதோ, எந்த ஆங்கிலர் முட்டுக்கட்டையாக இருப்பதாகச் சொல்லப்பட்டதோ, எந்த ஆங்கிலர் எதிரியாக இருப் பதாகச் சொல்லப்பட்டதோ, அந்த ஆங்கிலர் இப் பொழுது ஆட்சியில் இல்லை. அந்நிய ஆட்சி மறைந்து தன்னாட்சி தோன்றியிருக்கிறது. நம்மை ஆளுவது நம்மவரே!பிற நாட்டாரல்ல!! இது நல்ல நிலை.நிலை உயர்ந்திருப்பதாகப் பொருள். ஆகையால் நியதிப்படி நினைப்பும் உயர்ந்திருக்கவேண்டும்.