உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிருக்கிற நேரத்திலே அனைவரும், எல்லாக் கட்சிக்காரர்களும், பொது மக்களும், தொழி லாளர்களும், அனைவரும்கலந்து அரசோடு இந்தக் காரி யத்திலே ஒரு தியாகத்திற்குத் தயாராகத்தான் இருக்க வேண்டுமென்பதை நான் இந்த மாமன்றத்திலே தெரி வித்துக் கொள்ளப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். திண்டுக்கல் பேசப்பட் பல்வேறு பிரச்சினைகள் இந்த மன்றத்திலே டிருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் நான் தனித்தனியாகப் பதில் சொல்வதற்கான நேரம் இல்லையென்றே கருதுகிறேன். பொதுவாக, திண்டுக்கல் இடைத் தேர்தலைப் பற்றிக் கடைசி யாகப் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் உட்படப் மாற்றுக்கட்சி உறுப்பினர்களும் இங்கே எடுத்துக் கூறியிருக்கு கிறார்கள். பல திண்டுக்கல்லிலே யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள், தேர்தல் முடிவென்ன என்பதைப் பற்றியெல் லாங்கூட இங்கே பேசி முடித்தாகிவிட்டது. நான் அங்கே செல்ல விரும்பவில்லை. (அங்கே என்றால் திண்டுக்கல்லுக் கல்ல.) இங்கே அந்தப் பிரச்சினைக்குச் செல்லவிரும்பவில்லை. திண்டுக்கல் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிடும். அங்கே மக்கள் சக்தியே கிடையாது. திரா விட முன்னேற்றக் கழகத்திற்கு என்று பேசப்பட்ட காலம் போய், இப்போது திடீரென்று, திண்டுக்கல்லிலே ஏதோ கள்ள ஓட்டுச்சேர்த்து விட்டார்கள், கள்ள ஓட்டுச் சேர்த்து விட்டார்கள் என்று பத்திரிகைகளிலே வருவதைப் பார்க் கிற நரத்தில், அங்கிருக்கிற ஒரு மறவர் குலத்துத் தோழனைச் சந்தித்தால், அவர், ஆம், கள்ள ஓட்டுத்தான் சேர்த்து க்கிறோம் என்று சொன்னார். அந்தச் சிலேடை எனக்கு முதலிலே புரியவில்லை. பிறகுதான் எனக்குப் புரிந்தது; பிறகு நானே சிரித்துக் கொண்டேன், அதை நான் இந்த அவையிலே விளக்குவது நல்லதல்ல என்கின்ற காரணத்தி னால் - ஏதோ 50,000 ஓட்டு, ஒரு இலட்சம் ஓட்டு சேர்க்கப் பட்டுவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. திருமதி டி. என். அனந்தநாயகி : கள்ளர்கள் ஓட்டுக்கும், கள்ள ஓட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டுக்கும் சிலேடை பேசி அந்த இனத்தின் பெருமையைக் குறைக்கக் கூடிய அளவுக்குப் பேசுவது நியாயமல்ல. மாண்புமிகு முதல்வர்: அந்த இனமே என்னை வாரிசாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த இனத்தோடு கலகம் மூட்டுகிற முயற்சியில் தோல்வியடைந்துவிடுவீர்கள். 1971- ஆம் ஆண்டு, சுருக்கு முறையில் வாக்காளர் பட்டியலைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/37&oldid=1705693" இலிருந்து மீள்விக்கப்பட்டது