பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 1. அடிமை வியாபாரி ஆப்பிரிகா கண்டத்தில் வசித்துவரும் நிகிரொ மக்கள் கறுப்பு நிறமுள்ளவர்கள். தடித்த உதடு களும், சுருட்டைத் தலையும் பெற்ற அம்மக்களைப் பார்த்தவுடனே, அவர்கள் நீகிரோவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம். முற்காலத்தில் வெள்ளேயர் கள் ஆப்பிரிகாவின் மேற்குக் கரையிலிருந்து அவர் களைப் பிடித்துக்கொண்டு போய், அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் விற்பனை செய்வது வழக்கம். அங்கே குடியேறியிருந்த ஐரோப்பிய வெள்ளையர்கள், அவர் க்ளை வாங்கி, தங்கள் தோட்டக் காடுகளில் வேலைக்கு வைத்துக்கொண்டார்கள். அமெரிக் கா வி ல் குடி யேறிய நீகிரோவர்கள், ஆண்களும் பெண்களும், தங்கள் குழந்தை குட்டிகளுடன் அங்கேயே வசித்து வரலாயினர். அவர்கள் அனைவரும் காலை முதல் இரவுவரை கரும்புத் தோட்டங்களிலும், பருத்திக் காடுகளிலும், மற்றும் கழனிகளிலும் வேலை செய்து வங்தார்கள். அவர்களில் சிலர் வெள்ளையர்களு ைய வீடுகளில் வேலை செய்து வந்தார்கள். அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின் தென்பகுதி யிலேயிருந்த ராஜ்யங்களிலேயே அடிமைகள் அதிக