பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயலாதுபோனுல், நாம் சுவர்க்கத்தில்தான் சந்திக்க வேண்டும்!'

அவனுடைய வருத்தத்தை அறிந்துகொண்டு, எலிஸா அவனைச் சமாதானப்படுத்தினுள். ' நம்மை வளர்த்துவரும் முதலாளிகளுக்குக் கேடு செய்யக் கூடாது ' என்று அவள் சொன்னாள்.

எவன் எனக்கு முதலாளி ' என்று ஹாரிஸ் கேட்டான்.

' என் முதலாளிக்கும் யசமாணிக்கும் விசுவாச மாக நடப்பதுதான் நியாயம் என்று நான் எண்ணி வந்திருக்கிறேன்.'

நீ வேண்டுமாளுல் விசுவாசமா யிருக்கலாம். சிறு வயது முதலே. உன்னை அவர்கள் வளர்த்துவந்தார் கள். ஆனால் எனக்கு எவனும் முதலாளியில்லை. நான் எத்தனை கசையடிகள் பட்டிருக்கிறேன் என்பது உனக் குத் தெரியுமா ? நான் பட்டதெல்லாம் போதும். இனி எப்படியாவது தப்பி ஓடவேண்டும். கானடாவிலே சுதந்திரமாக ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம்.'

அவனுடைய உறுதியைக் கண்ட எ லிஸா, அவன் எதிரிகளிடம் அகப்பட்டால், தோலை உரித்துவிடுவார் கள் என்று எச்சரிக்கை செய்தாள். அவன், ' என்னைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். எப்படியாவது நீ வெளியே வந்து சேர்ந்தால் போதும் ' என்ருன். அன்று அவன் ஏதோ வெறிகொண்டிருந்தான். எவ்வி தத்திலும் அவனைத் தடுக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டு, எலிஸா மெதுவாக அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிளுள். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களிலிருந்தும் கண்ணிர்

8

8