பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. வ.வெ. னில், ஒரு வேளை அதுவே அவர்களுடைய கடை சி சக்திப்பாக இருக்குமோ என்று அவர்கள் சங்தேகம் கொண்டிருந்தனர். க ண வ ன் இயற்கையிலேயே துக்கப்பட்டுக் கொண்டிருந்ததால், எலிஸா குழங்தை, யைப்பற்றி அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. St.Karier's Coller

              டாம் மாமாவின் குடிசை

டாம் மாமாவின் குடிசை ஷெல்பி பிரபுவின் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. குடிசைக்கு முன் ளுல் அழகிய ரோஜாச் செடிகளுள்ள ஒரு சிறு தோட்டமும் இருந்தது. குடிசை மரக்கட்டைகளால் அமைந் தது. டாமின் மனைவி குளோ என்பவள், யசமான வீடடில் வேலைகளை முடித்துவிட்டு, அந்தக் குடிசைக்கு வந்து, பலகாரங்கள் தயாரித்துக் கொண்டிருந்தாள். ஷெல்பியின் வீட்டில் அவள் தான் தலைமையான சமை யற்காரி. அந்த மாவட்டத்திலயே சமையல் செய்வ தில் தனக்கு நிகரானவர் இல்லை என்று அவள் பெருமை பேசிக் கொள்வாள்.

அறையில் ஒரு மூலையிலே ஒரு கட்டில் இருந்தது. அதனருகில் இரண்டு பையன்களும், ஒரு பெண் குழங் தையும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மோலே, பீட்டர் என்ற அந்தப் பையன்கள் தங்கள் தங்கைக்கு நடமாடக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூவரும் டாமின் குழந்தைகள்.

டாம் மாமா, ஒரு நாற்காலியில் அமர்ந்து, மேசை

D

9