பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஊருக்கு எழுதி யிருந்த கடிதத்திற்கு நாளடைவில் குளோவிடமிருந்து பதிலும் வந்தது. அவளுக்காக ஜியார்ஜ் அந்தக் கடி தத்தை எழுதியிருந்தான். ஊரில் எல்லோரும் சுக மென்றும், குளோ ஒரு ரொட்டிக் கடையில் வேலை பார்ப்பதாயும், மோஸேயும், பீட்டரும் நன்ருக வளர்ந்து வருவதாயும், குழந்தை போலி வீட்டிற்குள் எங்கும் சுற்றி நடந்து வருவதாயும் அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்புதான் துன்பங் கள் தொடர ஆரம்பித்தன. கோடைக் காலத்தில் வுெய்யில் மிக அதிகமா யிருந்தது. சிறிது காலமாகவே ஈவாவுக்கு உடம்பு சரியாயில்ல அவள் ஓயாமல் இருமிக்கொண்டே இருந்தாள். ஒபீலியா, தனக்குத் தெரிந்த மருந்துகளை யெல்லாம் கொடுத்தும், பயன் ஏற்படவில்லை. ஈவா மெலிந்துகொண்டே வருவதை டாம் கவனித்தான். அவள் முன்போல் ஓடிச் சாடித் திரிவதில்லை ; மற்ற நீகிரோ குழந்தைகளுடன் மணிக்கணக்காக விளை யாடுவதில்லை. ஆயினும் அவள் விரைவிலே குண மடைந்துவிடுவாள் என்றுதான் டாம் எண்ணியிருந் தான். கோடைக் காலத்தில் அகஸ்டின் குடும்பத்தார் கிராமப் புறத்திலே அவர்களுடைய சொந்த வீடு ஒன் றில் தங்கியிருப்பது வழக்கம். அந்த ஆண்டிலும் அவர்கள் அங்கே போயிருந்தார்கள். வீட்டினருகில் அழகான பெரிய ஏரி ஒன்றிருந்தது. ஒரு நாள் மாலே ஈவா டாமுடன் அந்த ஏரிக்கரையிலே அமர்ந்திருந் தாள். வேதப் புத்தகத்திலிருந்து சில அருமையான

60

60