பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதிகளை அவள் அவனுக்கு வாசித்துக் காட்டி ஆள். திடீரென்று அவள் ஏரியை உற்றுப் பார்த்து, அதில் கதிரவனின் பொன்னிறமான கிரணங்கள் பாய்வதைக் கவனித்தாள். உடனே டாம், அதோ தெரிகிறது பார்!’ என்று அவள் சொன்னுள். ‘என்னம்மா, அது?’ என்று கேட்டான் டாம். ஈவா நீரில் தான் பார்த்த இடத்தைச் சுட்டிக் காட்டி, ". அங்கே இருக்கிறது சுவர்க்கம்! கதிரவன் ஒளியால் அங்கு நெருப்பைப்போல் ஒரே சிவப்பாயிருப் பதைக் கவனி! நான் அங்கேதான் செல்லப் போகி றேன்!" என்ருள். இதைக் கேட்ட டாமுக்கு உள்ளம் உடைந்து போய்விட்டது. உண்மையிலேயே ஈவா தங்களே விட்டுப் பிரிந்து போய்விடுவாளோ என்று அவன் அஞ் சிஞன். பூவுலகிலே ஒரு தெய்வப் பெண்ணைப்போல கடமாடிக் கொண்டிருந்த ஈவா விரைவிலே தேவ உலகம் போய்ச் சேர்ந்துவிடுவதுபோல அவனுக்குத் தோன்றிற்று. அவன் அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தான். ஜுரத்தினல் அது கொதிப்படைந்திரு தது. அந்த நேரத்தில், 'ஈவா, ஈவா! வீட்டுக்குள் வந்து விடு, .அம்மா! வெளியே பனி விழத் தொடங்கிவி டது' என்று வீ ட் டி லி ரு ங் து கூவியழைத்தா ஒபீலியா. டாம் மினத்தது சரியாகத்தானிருந்தது. ஈவ நாளுக்கு நாள் மெலிவடைந்து வந்தாள். சிறங் வைத்தியர் ஒருவர் அவளுக்கு மருந்து கொடுத்து வ தார். ஆயினும் ஒபீலியா அவள் கெடுநாள் உலகி தங்கியிருக்க மாட்டாள் என்பதைத் தெரிந்துகொன் டாள். அதைப் பற்றி அவள் மேரியிடம் சொல்லி

O I

61