பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகஸ்டின், ஈவா பிரிந்து சென்ற பிறகு எனக்கு உலகமே வெறுமையாகிவிட்டது!’ என்று டாமிடம் கூறினர். அத்துடன் தன் மகளின் எண்ணத்தின்படி: டாமை விரைவிலே விடுதலை செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாயும் அவர் கூறினர். எந்த நேரத் திலும் நீ ஊருக்குப் புறப்படத் தயாராயிரு உன் பெட்டி, சாமான்களை எடுத்து வை. நீ உன் மனைவி மக்களுடன் போய்த் தங்குவதற்கு உரிய விடுதலைப் பத்திரம் எழுதிக்கொண்டு வரும்படி சொல்லியிருக்கி றேன்!” என்றும் தெரிவித்தார். டாமுக்குத் தன் விடுதலையைக்காட்டிலும் யசமான ருடைய உடலைப் பற்றியே அதிகக் கவலையிருந்தது. அவர் மெலிந்துகொண்டே வந்தது எதில் கொண்டு போய் விடுமோ என்று அவன் கலங்கிஞன். ஒபீலியா வும் அவரைப் பற்றிக் கவலை கொண்டிருந்தாள் அவள் டாப்ஸியை அடிப்பதை கிறுத்திவிட்டிகள் அவளைத் திருத்துவதற்கு அன்பைத் தவிர வேறு வழி யில்லை என்பதை ஈவா மூலம் அவள் தெரிந்துகொண் டாள். டாப்ஸியும் நாளுக்குநாள் திருந்தி வந்தாள். டாப்ஸியை ஒபீலியாவுக்கு அளிப்பதாக அகஸ்டின் ஒரு பத்திரம் எழுதி, அதை ஒபீலியாவிடமே ஒப் படைத்துவிட்டார். ஒரு நாள் மாலை, வெளியே போய்ச் செய்திகளே விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம் என்று, அகஸ் டின் வீட்டைவிட்டு வெளியே சென்ருர். டாம் தன்னு, டன் வரவேண்டியதில்லை யென்றும், அவன் வீட்டு வாசலிலேயே இருந்தால் போதுமென்றும் அவர் சொல்லியிருந்தார். அப்பொழுது மாலை கழிந்து இருட்டும் நேரம்.

71

71