பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

47


இப்படி இணையற்ற தன்மை பெற்ற திசுக்கள் இரண்டு விதமாக மாறி, உடலுக்குள் பணிபுரிகின்றன. ஒன்று முக்கியமான உறுப்புக்களாக (Vital Organs) அமைந்திருப்பது. மற்றொன்று உறுப்புக்களை இணைக்கின்ற இணைப்புத் திசுக்களாகிவிடுவது.

இத்தகைய இணைப்புத் திசுக்கள் உடல் முழுதும் நீக்கமறப் பரவி இருக்கின்றன. இவை வளர்ந்து கொள்ளவும், மாற்றி அமைத்துக் கொள்கின்ற ஆற்றலும் உடையவை. உதாரணமாக, காயம் பட்ட இடத்தில், தீய்ந்து போன தோல்களின் மீது இவை மாறி, தழும்பாக ஆகிவிடுகின்றன.

வயது ஆக ஆக, இணைப்புத் திசுக்கள் வாட்டமடையாமல் வேலை செய்கின்றன. ஆனால் முக்கிய உறுபபுக்களாக அமையும் திசுக்கள் தான் தங்கள் செயல் வேகம் குறைந்து, சுருங்கிக் கொள்ளும் தன்மைகளை அடைகின்றன.

முக்கிய உறுப்பின் திசுக்கள் வளர்ச்சி குறைந்து சுருங்கும்பொழுது. இணைப்புத் திசுக்கள் மட்டும் சற்றும் களைக்காது இருப்பதால் மாற்றங்களில் சில ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனைத் தோல் அமைப்பிலே நாம் காணலாம்.

தோலின் உட்புறம் எபிதீலியல் திசுக்கள் என்று ஒரு மெல்லிய அடுக்கு இருக்கிறது. அதற்குக் கீழே இணைப்புத் திசுக்களின் அடுக்கு, அதற்கும் கீழே கொழுப்புப் பரவியிருக்கிறது.

வயது ஏற ஏற, மேலே உள்ள எபிதீலியல் திசுக்கள் மேலும் மேலும் மெலிந்து போய் விடுகின்றன. அதனால் தோலின் பளபளப்பும் மினுமினுப்பும் குறைந்து மாறி விடுகின்றன.

வழவழப்பினை வழங்குகின்ற, வியர்வையை சுரக்கின்ற வியர்வைச் சுரப்பிகளும் செயல் வேகம் இழந்து விடுவதால்,