பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


துண்டித்துப் போய் விடுகிறது. நமது உழைப்பை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுவதால் தான், மனம் பேதலித்துப் போய் விடுகிறது.

“மற்றவர்களுடன் சகஜமாக உறவாடுபவர்களும், வாழ்க்கையில் திருப்தி கொண்டவர்களும் தான் நன்றாக வாழ்கின்றனர்” என்று செகன்பர்க் சொல்லியிருப்பதை மீண்டும் கவனிப்போம்.

அவருக்கு அவரே எதிரி

நாம் தனிமைப்படுத்தப் படுவோம் என்ற நினைவைத் தவிர்ப்பது மனதுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவது மனதுக்கு இன்பம் அளிக்கும். அதனால் மனதுக்கும் திருப்தி கிடைக்கும். திருப்தியே தெம்பைக் கொடுக்கும். அந்தத் தெம்புதான் ஒருவரை இளமையாக வாழச் செய்கிறது.

‘வயதாகி விட்டது. முதுமை வந்து விட்டது’ இனி, ஓரம் கட்டிக் கொண்டு வாழ்வோம், என்று யார் ஒதுங்கிப் போகின்றாரோ, அவர்தான் அவருக்கு எதிரி.

வீட்டில் உள்ளவர்களோடு உணர்வால் பங்கு பெறுவது, மகிழ்ச்சியுடன் கலந்துறவாடுவது, அவர்கள் கடமைகளுக்கு உதவுவது; அவர்கள் இன்ப துன்பங்களில் பங்கு பெறுவது, இவையெல்லாம் மனதை மகிழ்விக்கும். திருப்தியை அளிக்கும்.

இறுதியில் மனம் பற்றி ஓர் உண்மையை உணர வேண்டும். வயதானவர்களின் உடல் மற்றும் மனநிலைகளில் ஏற்படும் சில நலிவுகள் தான் அவர்களை வயதானவர்களாக்கிக் காட்டி இளமை உணர்வுகளைத் துண்டித்து விடுகின்றன.