பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--~~ SYLLL00SAAAAS00 SAA0000 io இறுக்கம் பெற்றுப் பெரிதாகத் தோன்றும். மற்ற அவயவங்கள் எல்லாம் சிறிதாக இருந்து, சில பாகம் மட்டும் பெரிதாக இருந்தால் தோற்றம் எப்படி இருக்கும்? தோற்றத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு பெருத் திருக்கும் தசைகளும் செய்வோரின் விருப்பத்திற்கிணங்க ஆக்கப்படுவதில்லை. அவைகள் தானாகவே உண்டாகின்றன. a.

  • -- * * * E.

குறிக்கோளின்றி, எந்தவித நோக்கமும் இல்லாமல் வேல்ை செய்பவர்களின் நோக்கம் வேலையை முடிப்பதிலும் கூலியைப் பெறுவதிலும் தான் இருக்குமே ஒழிய, தசையை வளர்ப்பதிலும், அழகு படுத்துவதிலும் இருக்காது. ஆற்றிலே இருக்கின்ற மேடும் பள்ளமும் போல் தானே அவர்கள் உடல் அமைந்திருக்கும்! அதைத் தவிர்த்து, ஒவ்வொரு தசைக்கும் எவ்வாறு இயக்கம் தருவது? அதனை எவ்வாறு பலப்படுத்துவது என்பதில் தான் உடலழகுப் பயிற்சிகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. அதனால் தான் முழு அளவிலே முழுமையான பயனைப் பெற முடிகின்றது. அழகான உடலையும் அதிகமான ஆண்மையையும் அடைந்து மேன்மை பெற முடிகின்றது. செய்யும் எந்தக் காரியமும், ஒழுங்காக அமைவதில்லை | என்பதை எல்லோரும் உணர்வர்.