பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 32

பயிற்சி 3 தொடக்க நிலை:

ஒரு சுவர் பக்கத்தில் நின்று கொண்டு இந்தப் பயிற்சியைச் செய்யவும். உயர்ந்த சுவர் ஒன்றின் அருகில் இடது கை சுவர்ப்புறம் அருகில் இருப்பது போல ஒரடி துாரத்திற்குத் தள்ளி முதலில் நிற்கவும். பிறகு இடது கையை சுவற்றில் வைத்துத் தள்ளுவதுபோல பிடிப்புடன் நிற்கவும்.

ப்போ பயிற்சியைத் தொடங்கவும்.

(ழிது D r=* - ର

இடது கையைக் கொண்டு சுவற்றைத் தள்ளுவது போல அழுத்திப் பிடித்தவாறு, பக்கவாட்டிலிருக்கும் வலது கையை தலைக்கு மேலாகக் கொண்டுவந்து இடப்புறமாக இடுப்பைவளைத்தவாறு வலது கையால் சுவற்றைத் தொடவும் பயிற்சியைத் தொடங்கும் முன்பே நன்றாக மூச்சிழுத்துக் கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து. முன் நின்ற நிலைக்கு வந்த பிறகு மூச்சு விடவும்.

இது போல் 8லிருந்து 10 முறை செய்யவும், அதே போல் வலது கையை சுவற்றில் ஊன்றுவது போல மாறி நின்று வலப்புற மாக இடுப்பை வளைத்து இடது கையால் சுவற்றைத் தொடவும்.

நாளாக நாளாக எண்ணிக்கையை அதிகப்படுத்தவும்.

பயிற்சி 4. தொடக்க நிலை:

ஒரு நாற்காலியின் ஒரத்தில் முதலில் உட்கார்ந்து கொண்டு பின் புறமாக கைகளைக் கொண்டு வந்து நாற்காலியின் பின் புறப்பகுதியை நன்குக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இனிமேல் பயிற்சியை செய்யவும்.