பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 40

சேருகின்ற பகுதியான பிட்டிப் பகுதியில் (Groin) சரியாக அமரும் வகையில் வைக்க வேண்டும்.

அதே போல் இடது காலையும் முழங்கால் மடிய வளைத்து வந்து, வலது கால்புறமாகக் கொண்டு சென்று இடது குதிகால் வலது புற பிட்டியில் அமர்வது போல வைக்கவேண்டும். தெளிவான செயல் முறைக்குப் படம் பார்க்கவும்.

இப்பொழுது குதிகால்கள் இரண்டும், இரண்டு பக்கத்தில் இடுப்பெலும்புக்குரிய எதிரிடத்தில், அடிவயிற்றை அடுத்து

இருப்பது போல இடம் பெற்றிருப்பதை நீங்கள் உணரலாம்.

o

பின்பு, உடலை நிமிர்த்தி, முழங்கால்கள் தரையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் உட்காரவும், வலது கையை வலது முழங்கால் மேலும், இடது கையை இடது முழங்கால் மீதும்

படத்தில் காட்டியிருப்பது போல் வைத்திருக்கவும்.

இனி, பயிற்சியைத் தொடங்கலாம். நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.

மூச்சை நன்றாக இழுத்து உள் அடக்கியவாறே இந்தப் பயிற்சி முழுமையும் செய்து முடிக்கவேண்டும்.

மூச்சடக்கியபடி, முன்புறமாகத் தலையை சாய்த்து மோவாய் (Chin) மார்புப் பகுதியைத் தொடுவது போல குனிந்து, பின் இடது காதானது இடப்புறத் தோளைத் தொடுவதுபோல பின்புறம் சாய்ந்து, பின்னர் தலையின் பின் பகுதி முதுகுப் புறத்தைத் தொடுவதுபோல பின்புறம் சாய்ந்து, பின்னர் வலது காதானது வலது தோள் பகுதியைத் தொடுவது போலத்தொட்டு, பிறகு மோவாய் மார்பினைத் தொடுவதுபோல வைத்து பிறகு தலையை நிமிர்த்தி மூச்சினை வெளியே விடவும்.