பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 62

அதே சமயத்தில், நெற்றி மோவாய் (chin) தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல வைத்து உடல் உறுப்புத் தளர்ந்த நிலையில் (relax) இருத்தியிருக்க வேண்டும்.

பிறகு, தலை, மார்புப் பகுதியை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி, முதுகெலும்பினைப் பின் நோக்கி வளைக்க வேண்டும். இந்த நேரத்தில், உடலைத் துள்ள விட்டோ அல்லது ஆட்டி அசைத்தோ உடலை உயர்த்தக் கூடாது.

சிறிது சிறிதாக, மேல் நோக்கி உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும். என்றாலும் இடுப்புப் பகுதி விரிப்பிலேதான் இருக்க வேண்டும். முன்பாதங்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

படத்தில் உள்ளது போல் நிமிர்ந்து 10 வினாடி இருக்கலாம்.

பிறகு மெதுவாக, கை அழுத்தத்தை (Pressure) குறைத்து. மெதுவாக முன்பு இருந்த நிலைக்கு முன் பகுதி உடலைக் கீழாகக் கொண்டு வரவும். பிறகு மூச்சை வெளியே விடவும்.

இதை தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறைசெய்யலாம்.

பயன்கள்: முதுகெலும்பானது இயல்பாக வளைந்து நெகிழுந்தன்மை பெறுகிறது. முதுகெலும்புத் தொடரிலிருந்து வருகின்ற 31 இணை நரம்புகள் வலிமை பெறுகின்றன. அதிக உழைப்பினால், வேலையில் பெறுகின்ற முதுகு வலியை இது போக்கி, இதமளிக்கிறது. வயிற்று தசைகள் இறுக்கப்பட்டு மலச்சிக்கல் தீர்க்கப்படுகிறது. ஜீரண சக்தி அதிகமாகிறது. அட்ரீனல், தைராய்டு சுரப்பிகளை நல்ல பணியாற்றத் தூண்டுகிறது. உடல் உயரும் வகைக்கு வழி செய்கிறது. -