பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

அப்பொழுதும் உடலை நிமிர்த்தி விறைப்பாக வைத்து. நெஞ்சை நிமிர்த்தி நேராகவே நின்று இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும்.

படத்தில் உள்ளது போல, கால்களை சேர்த்து வைத்தும் இந்தப் பயிற்சியை செய்யலாம். இல்லையென்றால் கால்களில் இடைவெளி வைத்து நின்று செய்தாலும் செய்யலாம்.

2. கால்களை சேர்த்து நின்று, கைகளை பக்கவாட்டில்

தொங்கவிட்டுக் கொண்டு நிற்கவும்.

நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு, கைகளைப் பக்கவாட்டில் (படத்தில் காட்டியபடி உயர்த்த வேண்டும். பிறகு அப்படியே தலைக்கு மேலே கொண்டு செல்லவும்.

பின்னர், கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்ததும் மூச்சை வெளியே விடவும்.

கைகளை தலைக்கு மேலே உயர்த்தும் பொழுது குதிகால்களை உயர்த்தி முன்பாதங்களில் நிற்கவும்.

குறிப்பு: ஆரம்பத்தில் 20 முறை செய்யவும். நாளாக நாளாகப் பயிற்சியின் எண்ணிக்கையை அதிக்ப்படுத்கிக்கொண்டு செல்லவும்.

3. கால்களை நன்கு அகலமாக விரித்திருக்க, நிற்கவும். கைகளை இடுப்பில் வைக்கவும்.

நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு, படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் இடதுபுறம் சாயவும். பிறகு நிமிர்ந்து மூச்சை வெளியே விடவும்.