பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 107


மேற்கூறிய தகுதிகளோடு, நீளத்தாண்டலில் சிறந்த வராக, விரைவோட்டத்தில் வல்லுநராக, உயரத் தாண்டு வதில் தீரராக, மும்முறைக் குதிக்க வேண்டியிருப்பதால் உடல் எடையை அதிர்ச்சி இல்லாமல் தாங்குகின்ற வலு உள்ள கால்கள் உடையவராக, கால்களும் கைகளும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு செயலாற்றக் கூடிய உட லமைப்புடன், நெஞ்சுரமும், கடின உழைப்பும் உள்ளவராக


இருக்க வேண்டும்.


மும்முறைத் தாண்டலை எவ்வாறு பழக வேண்டும்?


நீளத்தாண்டலுக்கு வேண்டிய செயல்கள் அத் தனையும் மும்முறைத் தாண்டலுக்கும் முக்கியமாக வேண்டும். உதைத்தெழும்பும் பலகை வரை வேகமாக ஓடிவருதல், பலகையை மிதித்ததும் பாய்ந்து தாண்டாமல், தாண்ட உதவிய காலாலேயே தாவி நிற்றல், பிறகு காலடி (Step) வைத்தல்; பிறகு அதே காலால் உதைத்து எழும்பித் தாண்டுதல், அவ்வாறு தாண்டும்போது காற்றிலே நடத்தல் என்ற முறைகளைப் பின்பற்றியே பழகவேண்டும்


தாவல் (Hop): எந்தக் காலால் பலகையை உதைத்து எழும்புகிறீர்களோ, அதே காலால்தான் தாவி தரையில் ஊன்றவேண்டும். அதாவது இடது கால்தான் ஊன்றித் தாண்ட உதவும் கால் (Take offoot) என்றால், அக்காலை பலகையில் மிதித்து எழும்பி, மேலே பாய்ந்துபோய் நிற்கும் போது அதே இடது காலால் மட்டும் நின்று விடுவதற்குத் தாவல் என்று பெயர். -


அந்த ஒரு முறை தாவலுக்கு எவ்வளவு தூரம்


தாண்ட வேண்டும் என்ற அளவும் இருக்கிறது. முழுச் சக்தியையும் தாவலுக்குப் பயன்படுத்தி விட்டால், மற்ற