பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


112 Π நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இதில் ஆற்றல் பெற, எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்? -


விரைவோட்டக்காரர்களால் தான் நீளத் தாண்ட லிலும், மும்முறைத்தாண்டலிலும் உறுதியாக வெற்றிபெற முடியும். ஆகவே, விரைவோட்டம் மிகுதியாகத் தேவை அத்துடன், விரைவோட்டக்காரர் செய்யக் கூடிய அத்தனைப் பயிற்சிகளையும் முறையோடு செய்க.


நீளத் தாண்டல் போலவே ஓடிவருதல், பலகையை மிதித்து எழல், தாவுதல் போன்றவற்றைச் செய்வதால், நீளத் தாண்டலுக்குரிய அத்தனைப் பயிற்சிகளையும் செய்க.


காலடி வைத்தல் (Step) கடினமான காரியம், ஆத லால், குறைந்த உயரம் உள்ள தடைகளைப் பயன்படுத்தி, தாண்டித் தாண்டிப் பழகினால் சீரான காலடிகள்’ சிறப்பாகக் கிடைக்கும்,


வலுவான கால்கள் தேவை. ஆகவே எடைப்பயிற்சி கள் செய்க.


காலடி நீளமாக எப்படி வைப்பது என்பதைப் பயில, நீளமாகக் கால்களைத் தாவித் தாவி வைத்து ஒடிப் பழகுதல் வேண்டும்.


நின்றுகொண்டேஎவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்பதைப் பயின்று, பிறகு ஓடிவந்து தாண்டி பரி சோதனை செய்து கொள்வது நல்லது. பலமுறை நின்ற வண்ணமே மும்முறைத் தாண்டிப் பழகுக.


அடிவயிறு நல்ல வலிமையுடன் விளங்க வேண்டும் ஆகவே, அடிவயிற்றுக்கான எல்லா எடைப்பயிற்சி களையும் செய்க.