பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இந்த முறையை எவ்வாறு பழக வேண்டும்?


எப்பொழுதும் முன்கால் குறுக்குக் குச்சியைத் தாண்டிவிடும். குச்சியை இடித்துத் தட்டி விடுவது பின்கால் தான் (இடதுகால்), ஆகவேதான் உதைத்தெழு கின்ற இடதுகாலை மட்டும், பின்பக்கமாக, உயரே தூக்கிப் பழக வேண்டும். தரையிலோ, பாயிலோ அல்லது நீளப் பெஞ்சியிலோ குப்புறப் படுத்துக்கொண்டு, முழங் கால் வளைவதுபோல, இடது காலை உயரே தூக்கிப் பல முறை பழகவேண்டும்.இந்தத் திறனை, மேலே குறிப்பிட்ட மாதிரியாக சிறந்த முறையில் பழகிக்கொண்டால் மிக உயரத்தை நம்சக்திக்கு அதிகமாகவே தாண்டிவிடமுடியும். இடது காலை எளிதாக, ஏற்ற முறையில், குச்சிக்கு மேலே தூக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், நல்ல சாதனையை சிறப்பாக ஆற்ற முடியும். பிறகு குச்சியைக், கடப்பது, பின் கீழே குதிப்பது, வலது காலை ஊன்றுவது, போன்ற மற்ற திறன் நுணுக்கங்கள் எல்லாம் சிறப்பாக வந்துவிடும்.


பாஸ்பரி முறை (Fosbury) என்றால் என்ன?


1968ம் ஆண்டிலிருந்து தோன்றியுள்ள ஒரு புதிய தாண்டும் முறை. அமெரிக்கவீரர் ஒருவர் 1968ம் ஆண்டு. ஒலிம்பிக் உயரத்தாண்டும் போட்டியில் 7 அடி 4% அங்குலம் தாண்டி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தினார். அவர் தாண்டியே விதமே அலாதியாக இருந்தது.


இடதுபுறமிருந்து தாண்ட ஓடிவந்து வலது காலால் உதைத்தெழும்பி, மேலே எகிறும்போது இடதுகால் முன்னே செல்ல, வலதுகால் தொடர்ந்தது. பிறகு, குறுக்குக் குச்சிக்கு மேலே சென்றவுடன் இரண்டு கால்