பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


1. இரும்புக் குண்டு எறிதல் (Shot Put)


இரும்புக் குண்டு எறிவோருக்குரிய தகுதிகள் எவை?


சிறிய கல் ஒன்றை எடுத்துத்துக்கி எறியும் பழக்கமும், அதிலிருந்து இளைஞர்களுக்குள் ஏற்பட்ட போட்டியின் விளைவாகத் தொடங்கி, அந்த எழுச்சியே இன்றைய இரும்புக்குண்டு எறியும் போட்டியாக வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.


ஆண்களுக்காக உள்ள எறியும் இரும்புக்குண்டின் எடை 16 பவுண்டு. பெண்களுக்கான இரும்புக்குண்டின் எடை 12 பவுண்டு.


எடை அதிகம் உள்ளதால், இதை எறிவோர் நல்ல உயரம் உள்ளவர்களாகவும், அதிக உடல் எடை உள்ள வர்களாகவும், அதிகத் திறன் நுணுக்கங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற சக்தியான ‘கை கால்கள் உடல் முழுதும் ஒன்று சேர்ந்த உடலமைப்பு உடையவர்களாகவும் இருப் பது மிகமிக அவசியம்.


விரைவோட்டக்காரர்களைப் போன்ற ஒடும் வேகம்: எடை தூக்குவோர்களின் போன்ற உடல் வலிமை; தேர்ந்த ஞானம் உள்ளவர்கள் போன்ற எறியும் திறன் நுணுக் கங்கள்; உடலை உதைத்து ஒரு வட்டத்திற்குள் விரைவாக உந்தி எழுகின்ற வலிமையான கால்கள்; இரும்புக் குண்டினைத் துக்கி எறிகின்ற ஆற்றல் மிகுந்த கைகள் கைகால்கள் இவற்றிற்கு ஈடுகொடுப்பதுபோல இடுப்பி அசைவு விருப்பம்போல் வளைந்து கொடுக்கின்ற முதுகு தசைகள் இத்தனைக்கும் மேலாக, உயர்ந்த நோக்கமும்