பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அதுவும் அன்றி, உடலின் எடை முழுவதையும் கால்களே தாங்கிக் கொண்டு, அந்த சிறிய வட்டத்திற்குள்ளே விரை வோட்டத்திற்குரியதான வேகம் முழுவதையும் காட்டு வதால் சிறந்த பலமுள்ளனவாகக் கால்கள் விளங்க வேண்டும்.


எடைப் பயிற்சிகள் நிறைய செய்ய வேண்டும். விரைவோட்டக்காரர்கள் செய்கின்ற அத்தனை பயிற்சி களையும் செய்ய வேண்டும்.


வட்டத்திற்குள்ளே நின்று கொண்டு, குண்டினைத் துள்ளி எறிந்த பிறகு, வெளியே வந்து விடாமல் இருக்கும் சம நிலைப் பயிற்சிக்காக, குண்டோடும், குண்டு இல்லாமலும் நின்று எறிந்து பழகவும்.


பலமுறை ஒடிப் பழகி, உடலைப் பதப்படுத்திக் கொண்டு, முன்புறம் இரண்டு கைகளாலும் குண்டைப் பிடித்து மேலும் கீழும் ஏற்றி இறக்கி, பின்புறமாக பலமுறை எறிவதன் மூலம் கைத்தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.


2. தட்டெறிதல் (Discus Throw)


தட்டெறிதல் என்றால் என்ன? அதற்குரிய தகுதிகள் யாவை?


கிரேக்க நாட்டிலே தட்டெறியும் போட்டிதான் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாகும். கிரேக்க நாட்டின் விளையாட்டு அடையாளச் சின்னமாக விளங்குவதும் தட்டெறிகின்ற நிலையில் இருக்கும் ஒரு ஆணுடைய சிலைதான்.இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அந்தக் காலத்து வீரர்கள் எல்லாம்,இரும்புக் குண்டினை எறிவது