பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 191


g


தெரிந்துகொண்டு, உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற நிகழ்ச்சி யைத் தேர்ந்தெடுங்கள்.


(2) நீங்கள் விரும்பி தெரிந்தெடுத்துக் கொண்ட நிகழ்ச்சி. உங்களுக்கு உடனே வந்து விடாது. திறன் துணுக் கங்களைக் கற்றுக் கொள்ளவும் முடியாது. உங்களில் சிலர் உடனே கற்றுக்கொள்ளலாம். சிலருக்கு காலதாமதம் ஆகலாம். சிலருக்கோ கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரியவரும். சிலர்மெதுவாகப் புரிந்துகொண்டு இறுதியில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். ஒரு சிலர் தொடக்கத்தில் சிறப்பாக இருந்து இறுதியில் ஏனோதானோவென்ற நிலைக்கு ஆளாகி விடுவார். ஆகவே, பயிலும் போதும், பழகும் போதும் நம்பிக்கைகளை இழந்து விடக்கூடாது. தன் வலிமையில் சந்தேகமே எழ கூடாது. உழைப்பதற்கு தயங்கக்கூடாது. லட்சியத்தை மறக்காமல், அன்றாடக் கடமைகளை அறிவாற்றலோடு செய்யவேண்டும்.


(3) தெரிந்த திறன் நுணுக்கங்கள் அதிகமாக வளர் வதற்கும் அழிவதற்கும் பல காரணங்கள் சூழ்நிலையால் அடையலாம் ஒருவருக்கு ஆசை இருக்கலாம், வெற்றி வீரராக வரும் ஆவேசம் இருக்கலாம், ஆனால் சேர்ந்துள்ள நண்பர்களால், பழக்க வழக்கங்களால், சுற்றுப்புற சூழ்நிலைகளால், கெட்டுப் போய்விடக் கூடிய நிலைமை வரலாம். ஆகவே உணர்வினை, உயர் ஆற்றலை, உள்ளார்ந்த நோக்கத்தைப் பாழடிக்கின்ற பழக்க வழக் கங்களை நீக்குவதோடு, அந்தக் கெட்டப் பழக்கங்களைப் போற்றி வளர்க்கின்ற நண்பர்களின் உறவையும் அறுத்துக் கொள்வது விவேகமாகும்.


(4) திறமை பிறவியிலே கிடைக்கிறது என்றாலும், அந்தத் திறமையைப் பயன்படுத்தினால் தான் திறமை