பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 D . நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


ஒளிரும், மிளிரும்; உலகமும் அந்தத் திறமையை வாழ்த் தும், வணங்கும், எனவே, இடைவிடாதபயிற்சி, சலிப்படை யாத முயற்சி, பொறுமையான உழைப்பிலேதான் பெரிய வீரர்களாக முடியும். இடைவிடாத உழைப்பு ஏமாற்றம் அளித்ததாக சரித்திரமே கிடையாது. புதிய வரலாற் றினைப் படைக்கப் போகின்ற உங்களுக்கு, ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள்.


(5) உடலை வளமான நிலையில் என்றும் வைத் திருங்கள். போட்டிக்காக மட்டும், போட்டி நடக்கின்ற ஒரு சில நாட்கள் மட்டுமே உடலை பாதுகாப்பாக வைத்திருந் தால் போதும் என்று நினைப்பது தவறான கருத்து. அறியாமை தந்த அந்நினைவை, அறவே அகற்றுங்கள். ஆண்டு முழுவதும் சீரான பயிற்சியை, செழிப்பான நடைமுறையைக் கையாளுங்கள். நாட்டுக்காக நீங்கள் செய்யப் போகும் தொண்டு இது. பிறந்த பொன்னாட் டிற்குப் பெருமை தேடித்தருகின்ற பெரும்பணி, தோன்றிற் புகழோடு தோன்றுக என்று வள்ளுவன் வாக்கிற்கு இலக் கியமாகப் போகின்ற உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.


வீராங்கனைகளுக்கு ஒரு சில வார்த்தைகள் :


“அகில உலக விளையாட்டுப்போட்டிகள் ஆண் களுக்கு மட்டும் இருக்கக்கூடாது. போட்டிகளிலே ஆண் பெண் பாகுபாடு கூடாது. அனைவருக்கும் பங்கு கொள் கின்ற உரிமைவேண்டும்” என்று அகில உலகப் பெண்கள் கழகத்தை 1921ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டிலே தோற்று வித்து, போராடிவெற்றிகண்டனர் மேல்நாட்டு பெண்கள். பெண்களுக்கும் உடல் திறனைப் பெருக்கவும், பெற்ற ஆற்றலை உலகுக்கு உணர்த்தவும் வாய்ப்பு தரப்பட்டது.