பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [T] 21


என்று போற்றப்பட்ட அவரின் லட்சியம் நிறைவேறியது என்றாலும் தொடக்க நாட்களில் அத்தகைய வரவேற்பு இதற்கு இல்லை. ஏன் வரவேற்பு இல்லை?


“பூனைக்கு யார் மணி கட்டுவது” என்று எலிகள் மயங்கியது போல, இவ்வளவு பெரிய பிரச்சனையை எப்படி சாதிக்க முடியும் என்று தயங்கியவர்கள் ஏராளம் எடுத்த முயற்சி தொடர்ந்து நடைபெறுமா? வெற்றி தருமா என்று வினா எழுப்பியவர்கள் ஏராளம் பாவம், என்று பச்சாதாபப்பட்டவர்கள் பலர். ஏன் இந்த சோதனை வேதனை என்று கூறி மறைந்து கொண்ட மாமனிதர்கள் பலர்.


இருந்தாலும் உலக அமைதியிலே, உலகத்தின் ஒற்றுமையிலே நாட்டம் கொண்டு உழைத்த அவருக்கு முதலில்துணைதந்த நாடுகள் ஒன்பதுதான்.ஆமாம்.முதல் புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கு பெற்ற நாடுகள் 9. பதினைந்து நூற்றாண்டுகள் கழித்து, பல்வேறு பட்ட துயர்களை, துன்பங்களைச் சமாளித்துத் துவங்கிய முதல் புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கையும் 59தான்.என்றாலும் ஒலிம்பிக் பிறந்த கிரேக்க மண்ணிலே, ஏதென்ஸ் நகரத்திலே, எல்லோருடைய வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டு புதிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிறந்து பவனிவரத் தொடங்கின.


பிறகு வளர்ச்சி ஏற்பட்டதா?


இல்லாமலா? ஒன்பது நாடுகளை வைத்துக் கொண்டு 1896ல் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம், 1928ம்