பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


ஆண்டு 46 நாடுகளுக்கிடையில் நடந்தது. 1968ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் 119 நாடுகள் பங்கேற்றன என்றால், ஒலிம்பிக் பந்தயம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறியது என்று தானே பொருள். இன்று 150 நாடுகளுக்கு மேல் பங்கு பெறுகின்றன.


இன்று நாம் கூடியிருக்கின்ற நோக்கமும், இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் நிறைந்த வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு பரிபூரணமாக இருக்கிறது. இந்திய வீரர்களைக் கண்டு, எல்லா நாட்டினரும் வரவேற்று, வாழ்த்தித் தலைவணங்கக் கூடிய அளவுக்கு விளையாட்டுக்களில் வல்லமை பெறும் சீரிய பணி இன்று தொடங்கி விட்டது. ஆல்போல் தழைக்க ஆண்டவன் அருளட்டும்.


ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் பற்றி உங்களுக்குச் சுருக்கமாகக் கூறினேன். நீங்களும் ஒலிம்பிக் வீரர் ஆகலாம்’ என்று நான் கூறிய உடனேயே, எங்களால் முடியுமா என்று யாரும் தைரியத்தை இழக்கவேண்டாம்; தாழ்வு மனப்பான்மையும் கொள்ள வேண்டாம்.


“மெல்ல மெல்ல எறும்பு ஊர கல்லும் தேயும்.” என்பது பழமொழி. இளமையிலே தொடங்கும் உங்கள் முயற்சி, காலத்தில் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும். மண்ணிலே தான் மரம், செடி முளைக்கும் என்பதில்லை பாறையைப் பிளந்து கொண்டு செடி முளைப்பதைப் பார்க்கவில்லையா? அந்த செடி ஒரே நாளிலா முளைத்து விட்டது. எத்தனை காலம் அது காத்திருந்தது! வளர உழைத்திருந்தது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.