பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அவரை தாண்ட ஊக்கியது. அவர் நின்று கொண்டே 2 us! # 35T 6331(5)lb GLTL 14-u?si (Standing High Jump) ஒலிம்பிக் பந்தயத்தில் பல முறை பரிசு பெற்றார். அவர் தாண்டிய உயரம் 5 அடி 5 அங்குலம். அதுவே பெரிய சாதனையாக உலகில் அமைந்தது.


ஏழை நீக்ரோவின் மகனாய் பிறந்த “ஜெசி ஒவன்ஸ்’ என்பவர் வறுமையில் வாடினார். வாழ்வுக்காக வேலை தேடினார். வகையாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவருக்குக் கிடைத்த வேலையோ மாலை 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பணியாற்றும் ஒர் சாதாரண வேலை. ஆனால் விளையாட்டிலோ அதிக ஆர்வம். ஏழ்மையும் வேலை இடற்பாடும் அவரது ஆர்வத்தைக் குறைக்கவில்லை. ஆற்றலை அகற்ற முடிய வில்லை. மாறாக, அவர் முயற்சியில் விளைந்தது விளை யாட்டு வீரம். மாலை 315 மணியில் 100 மீட்டரிலும்,325க்கு நீளத் தாண்டலிலும், மாலை 345க்கு 220 கெஜ ஒட்டத் திலும், மாலை 4 மணிக்கு 220 கெஜ தாழ்நிலை தடை யோட்டத்திலும் (Low Hurdles) வெற்றி பெற்று அத்தனை யிலும் வெற்றி பெற எவ்வளவு சக்தி வேண்டும்? எவ்வளவு பயிற்சியும் முயற்சியும் வேண்டும்? அவருக்கு அந்த சக்தியும் ஆற்றலும் எவ்வாறு கிடைத்தது என்று ஒரு முறை எண்ணிப் பாருங்கள்!


“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்” என்று வள்ளுவர் பாடியதற்கு மேற்கூறிய மூவரும் எப்படி சான்றுகளாய் அமைந்துள் ளார்கள் பார்த்தீர்களா? உள்ளம் நினைக்க வேண்டும். உடல் உழைக்க வேண்டும். வெற்றி கிடைக்கும். இன்றே முயல்க!