பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மேற்கூறிய எல்லா காரணங்களும் நடைமுறையில் பொய்யாகிப் போயின.அரை நூற்றாண்டு காலமாக பங்கு பெறுகின்ற எந்த வீராங்கனையும் ஆணாக மாறிவிட்ட தாகவோ, பெண்மையிழந்து போனதாகவோ, அடங் காமல் அலைந்ததாகவோ, குடும்பப் பெண்ணாக வாழா மல் கோணல் வாழ்க்கை வாழ்ந்ததாகவோ சரித்திரம் கிடையாது.அகில உலகப் புகழ்பெற்ற அனைவரும் சிறந்த குடும்பப் பெண்மணிகளாகத் திகழ்கிறார்கள். மற்றவர்கள் மதிக்கத் தக்க வகையில் வாழ்கின்றார்கள்.


பின் ஏன் அவ்வாறு கூறுகின்றார்கள்?


ஒரு காலத்தில் சிலர் அவ்வாறு கூறினார்கள். சரித்திரம் காட்டிய உண்மையைக் கண்டு அவர்களே தங்களைத் திருத்திக் கொண்டார்கள். ஆனாலும், பெண்கள் இன்னும் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) காரணமாக விளையாட்டுத் துறைக்கு வர வெட்கப்படுகின்றார்கள். பங்குபெறத் தயங்குகின்றார்கள்.


நடனம் ஆடுவதற்கும் நடிப்பதற்கும் தங்கள் பெண்களை அனுப்பத் தயாராக இருக்கிறார்கள் ஒரு சில பெற்றோர்கள், அதிலே வருமானம் வருகிறது என்ற காரணத்தால். வருமானம் வருகிறதே தவிர அதிலே அவமானமும் வருகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. ஆனால் விளையாட்டுத்துறை அப்படி அல்ல. அதனால் விளையும் நன்மைகள் பல.


விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கெள்வதால் என்ன பயன் கிடைக்கிறது?


உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்திட கலை கள் உதவுவது போல, உடல் உணர்ச்சிகளை வெளிப்