பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 33


படுத்த வழிவேண்டாமா? அந்த வழிதான் விளையாட்டு. ல் உணர்வினை வெளிப்படுத்துவதோடு, உயர்ந்த


ஆற்றலை, உன்னத சக்தியை உலகுக்கு உணர்த்த வாய்ப் பளிக்கிறது. பலருடன் பழகும் காரணமாக சிறந்த அனு பவம் பெற, அந்த அனுபவத்தால் நல்ல வாழ்வு பெறும் வழியை நல்குகிறது. தன் திறமையை புரிந்து கொண்ட ஒருவருக்கு, தன் தகுதியை வளர்த்துக் கொள்ளவும் தானத்தோடு வாழவும் முடியும் என்பது உலகறிந்த


உண்மை.


அப்படியானால், தாழ்வு மனப்பான்மை வரக் காரணம் என்ன?


மனிதன் வாழத் தொடங்கிய நாட்களில், குடும்ப, ாக வாழத் துவங்கிய ஆரம்ப காலத்தில், தாய்தான் குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்தாள். காலம் மாற மாற, குடும்பப் பொறுப்பு தந்தையின் கைக்கு வரத் தொடங் யது பல நூற்றாண்டு காலமாக, பெண் இனம் ஆண் |னத்திற்கு அடிமையாகி, உரிமையிழந்து கிடந்தது. உரிமையிழந்த உள்ளத்தில் வளர்ச்சி குன்றியது.


நன்கு உழைக்கப் பயன்படும் வலதுகை பெருத்தும், குறைவாகப் பயன்படும் இடது கை சிறுத்தும் காணப் படுகின்றதல்லவா! அதே போல், பெண்கள் பன்னெடுங் காலமாகப் பதுமைகள் போல் பாதுகாக்கப்பட்டார்கள். பத்திரப்படுத்தி வைக்கப்பட்டார்கள். அடிமையாக்கப் பட்டார்கள். அடுத்தவர் சொற்படி ஆடும் பம்பரமாக வாழ்ந்திருந்தார்கள். இந்த வாழ்க்கையில் வாழ்ந்த நெஞ்சம், தன்னையே தாழ்வாக எண்ணத் தொடங்கியது.


“வெளியே வராதே, முகத்தைக் காட்டாதே’ என்ற சமுகக் கட்டுப்பாடும், சழக்கர்களின் கடுந்தண்டனைகளும்