பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


முறையில்தான், முதல் வட்டத்தைவிட, இரண்டாம் வட்டத்தை குறைந்த நேரத்தில் ஒடி முடிக்கும் ரகசியம். அவ்வாறு எழுச்சியுற்று ஒடுகிற வேகத்தால்தான் நேரத்தில் சாதனை புரிய முடிகிறது. (ஒடுகின்ற முறையை 1500 மீட்டர் ஒட்டப் பகுதியில் காண்க).


அந்த யுக்தியைக் கடைப்பிடித்து, நீங்கள் பயிற்சி களைச் செய்ய வேண்டும். பல முறைகளில் திட்டமிட்டு செயல் புரிய வேண்டும். திறமையைத் திறன் நுணுக்கங்கள் மூலமாக நிறைவுபடுத்த வேண்டும். 800 மீட்டர் ஓட்டத்திற்கான பயிற்சி முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?


விரைந்தோடும் கால்களுக்கு வலிமை வருகின்ற, சக்தி தருகின்ற எடைப் பயிற்சிகள் செய்ய வேண்டும், தொடைத் தசைகளும், கெண்டைக் கால் தசைகளும், அடிவயிறும், கழுத்தும் நல்ல வீறுகொண்டதாக விளங்கு மாறு பயிற்சிகள் இருக்க வேண்டும். கைகள் விரைந்து முன்னும் பின்னும் இயங்குவதால், தோள்களும், முதுகுப் பின்புறமும் வலிமையுள்ளனவாக இருத்தல் மிக மிக அவசியம்.


எடைப் பயிற்சிகளைத் தினந்தோறும் செய்வதுடன் வாரத்திற்கு ஒரிரண்டு முறை 4 அல்லது5 மைல் ஒடிப்பழக வேண்டும். இது உடலுக்குத் திறனையும், மனதுக்குத் தெம்பையும் தருவதுடன், ஒடும் வேகத்தை மிகுதிப் படுத்தவும் உதவுகிறது.


வட்டங்கள் எத்தனை ஒடவேண்டுமென்பது அந்தப் பந்தயக்களத்தைப் பொறுத்து (நான்கோ அல்லது