பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தெரியாதா, இடம் புரியாதா என்று அவனது பார்வை நாலாபுறமும் போய் போய் திரும்புகிறது. கால்கள் இரண்டும் கீழே கிடக்கும் காய்ந்த சருகுகளுக்கிடையே புகுந்து புகுந்து வெளியே வருகின்றன.

திடீரென்று ஒரு சத்தம். அவனது உடலோ, அதல பாதாளத்தில் போவது போன்ற ஒரு பிரமை, ஆமாம். அவன் வைத்த அடுத்த அடியானது, இலைகள் மூடிக் கிடந்த பாழுங்கிணறு போன்ற பெரிய பள்ளத்திற்குள்ளே கொண்டு சேர்த்து விட்டது.

கீழே கீழே போய்க்கொண்டிருந்த அவன், அப்படி இப்படி அசையும் பொழுது, அவனது கைகள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொள்கின்றன. ஒரு விழுதுபோன்ற ஒன்றைத் தான் பற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறான். அதைப் பிடித்த வேகத்தில் அந்தரத்தில் ஊஞ்சல் போல் ஆடிக் கொண்டிருக்கிறான். வேகமாக அசைந்தால், தரைப் பக்கம் கால் வைக்கலாம் என்று முயற்சி செய்கிறான். ஆனால் படமெடுத்தவாறு பாம்பு ஒன்று. இவனையே பார்த்து சீறிக் கொண்டிருக்கிறது.

பயந்துபோய் பள்ளத்தைப் பார்க்கிறான். இவன் கீழே விழுந்திருந்தால், கழுவேறியிருப்பான். ஒடிந்த மரம் ஒன்று மொட்டையாக நடுவில் நின்று கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்திலே புலி ஒன்று வாயைப் பிளந்தபடி இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறது. என்றைக்கு அது இந்தப் பள்ளத்தில் விழுந்ததோ? யார் கண்டது? ஆனால் அதன் முகத்தில் பசியின் வேகமும் சோகமும் நன்கு தெரிகிறது.