பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

35



அந்த ஆண்டு; உலகநாதன் வேலைகளை ஆரம்பித்தான். சாமிநாதன் மிகவும் பணிந்து கூறினான். நாம் விவசாயத்தை மேடான வயல்களில் மட்டும் செய்யலாம். ஏனென்றால் இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றான். உலகநாதனும் சரி என்று அவ்வாறே பயிரிட்டான். என்ன ஆச்சரியம்! ஊரிலே பெருமழை பெய்து, மற்றவர்கள் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் அழுகிப் பாழான போது, உலகநாதன் பயிர்கள் மட்டும் தப்பித்துக் கொண்டன. பயிர்கள் தழைத்து செழித்தோங்கி விளைந்தன. இறுதியில், அதிக மகசூல். அதை அதிகப்படியாய் விற்றுப் பெரும் பொருள் சேர்த்தான். தரும சிந்தனையுள்ளவன், பொருள் ஆசையால், மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுப் பணக்காரன் ஆனான்.

அடுத்த ஆண்டு, சாமிநாதன் யோசனையின்படி விவசாயம் பள்ளமான வயல் பகுதிகளில் நடந்தது. மற்றவர்களோ பயந்து கொண்டு மேடான பகுதிகளில் விவசாயம் செய்திருந்தார்கள். இந்த ஆண்டு மழையே இல்லாமல் போனது. பள்ளப் பகுதிகளில் இருந்தவர்கள். மட்டும் பிழைத்துக் கொண்டனர். முடிவு உலகநாதனுக்கு மீண்டும் அதிர்ஷ்டம். நல்ல விளைச்சல். பணம் பெருகியது. சாமிநாதன் இப்பொழுது உலகநாதனின் உற்ற நண்பன் என்ற அளவுக்கு உயர்ந்தான். அப்பொழுது, ஆரம்பித்தது அவலம்? எப்படி?

பணக்காரன் ஆகிவிட்ட உலகநாதனுக்குப் பலப்பல நினைவுகள் வந்து ஆசை மூட்டினாலும். அவனது பழைய பண்புகள், அவற்றைத் தலை தூக்கிவிடாமல் மட்டந்-