பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

39


7. புண்ணாக்குப் பையன்

தன் மருமகனைப் பார்க்கும் பொழுதெல்லாம், தங்கத்திற்குப் பெருமையாக இருக்கும். தன் மகளுக்கு இப்படியொரு ஆண்மகன், ஆளாலழகன் கிடைத்தானே என்றும்! மற்றவர்கள் பொறாமைப்படுவார்களே என்று அவள் மனம் அடிக்கடி துடிக்கும். பிறர் கண்பட்டுவிடுமே என்று திருஷ்டி சுற்றிப் போடுவது, தினமும் அவளுக்கு வேலையாகவே போய்விட்டது. திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மன்மதன் ரதிபோல மகனும் மகளும் தெருவில் போகின்றார்கள் என்று மனதுக்குள்ளே சொல்லி மகிழ்ந்து போவாள் தங்கம். அழகும் குணமும் உள்ள ஒரு பையன். கிடைப்பது இந்தக் காலத்தில் குதிரைக் கொம்பாக அல்லவா இருக்கிறது!

தன் மகளை மருமகனோடு ஊருக்கு அனுப்புகின்ற நாளும் வந்தது. மகளுக்கு அறிவுரை கூறினாள். மருமகனையும் தன் மகளை நன்றாய் பார்த்துக் கொள்ளும்படி நெஞ்சுருகக் கேட்டுக் கொண்டாள். அவனும் சரியென்பதற்கு அடையாளமாகத் தலையாட்டி வைத்தான். தாய்க்கு உள்ள பெருமை போலவே மகளும் கொண்டிருந்ததால், அவளும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி வைத்தாள். பயணம் இனிதே நடந்தது.

ஒரு வாரம் ஆயிற்று. ஊருக்குப் போய் தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று தங்கத்திற்குத் தீராத ஆவல். மாமியார் அல்லவா இப்போது? புதுக் குடித்தனம் எப்படி இருக்கிறது என்று பார்த்து, மகளுக்குப் புத்திமதி