பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



தோலின் பயனை அறிந்து கொள்வோமானால், அது உட்புற உறுப்புக்களைப் பத்திரமாக மூடிப் பாதுகாத்து வைக்கிறது. தனக்குரிய எண்ணெய் பசையை உற்பத்தி செய்து கொண்டு, மினுமினுப்புடன் வைத்துக் கொள்கிறது. தனக்கு உண்டாகும் காயங்களை விரைவில் ஆற்றிக் கொள்கிறது.

குளிர் காலத்தில் உடலுக்கு வேண்டிய வெப்பத்தை உருவாக்கிக் கொள்கிறது. வெப்பக் காலத்தில் வியர்வையை வழிய விட்டு, தேகத்தின் சூட்டைத் தணித்துக் கொள்கிறது.

வியர்வை வெளிவந்து, தோலின் மேற்பாகத்திலேயே காய்ந்து உலர்ந்து போயிருக்கும் வேளையில், காற்று வந்து உடலைத் தழுவிக் கொண்டு தந்த புழுதியையும் மற்றும் பலவிதமான பொருட்களையும் தோலின்மேல் அழுத்தி அமர்த்தி விட்டும் போகிறது! அத்துடன், மேல் தோல் பகுதியானது வேலையாலும் வெப்பத்தாலும் கழிகிறது. இந்தச் சமயத்தில் தோலின் உட்புறத்தில் சுரக்கும் எண்ணெய் பசையும் மேலே வந்து கலந்து கொள்ளவே, எல்லாம் ஒன்று சேர்ந்து ஒருவிதமான ‘புதுமணத்தை’ உண்டாக்கி விடுகிறது.

அழுக்குப் பாலமாக மேல் தோல் பகுதி அமைவதால், அதனை உடனே அகற்றிவிட வேண்டும் என்பதற்காகத் தான் தினம் குளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேலே தங்கி விடுகின்ற அழுக்குப் படலத்தை, அழுக்குப் பாறையை அன்றாடம் அகற்றி விடுகின்ற