பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


இன்னும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இக் கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட ஒரு மனிதனை, அப்பொழுதுதான் யாரென்று உண்மையாகவே அவனை புரிந்து கொள்ள முடிகிறது. அவன் தைரியசாலியா, தன்னம்பிக்கை உள்ளவளு; தந்திரம் தெரிந்தவன, சமாளிக்க முடிந்தவ கு) என்பன போன்ற தகுதிகளை யெல்லாம் உடையவன என்பதை அப்பொழுது தான் அறிய முடிகின்றது . ஆகவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள் கிறவன், தர்க்கம் செய்து நல்ல சூழ்நிலையினை தகர்த்து விடாது ஏற்றுக் கொள்கிறவன் என்றும் மகிழ்ச்சி யாகவே வாழ்கிருன். s நாய் வாலே நிமிர்த்த முயல்கிறவன் வெற்றி பெறுவ தில்லை. தலையில் விழுந்த முடியை மீண்டும் ஒட்ட வைக்க முயல்பவன் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை நிலைமைக்கேற்ப, நியதிக்கேற்ப, இடத்திற்கேற்ப, இயல்புக் கேற்ப, இனத்திற்கேற்ப, கூடியிருப்போரின் குணத்திற்கேற்ப பாடறிந்து ஒழுகுபவன், பயனடைகிறன். நிம்மதி அடை கிருன், மனதில் மகிழ்ச்சியையும் அடைகிருன்.