பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வாழ்க்கையைப்பெற்றுக் கொள்கிருர்கள். உழைக்கும் கடமை யில் மகிழ்வோம். கிடைக்கும் பலன்களில் மகிழ்வோம். ஏனென் ருல், "நாம் எதையும் சம்பாதிப்பதில்லை. இறைவன் தான் கொடுக்கிருன்..' என்னும் பெரியவர்கள் வார்த்தைகளை இங்கு நினைத்துக் கொள்வோம். 4. தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை. அம்மா பெரிதென்று அகமகிழ்க ஏழு உலகத்தையும் ஆள்வதற்கு ஒரு முனிவருக்கு வாய்ப்புக் கிடைத்த பொழுதும், அவர் வருத்தமாகக் கிடந்தாராம். ஏன் என்று கேட்டபொழுது. இன்னும் ஒர் உலகம் கிடைத்தால் எட்டாக இருக்குமே. அது இல்லாமல், ஏழுதானே இருக்கிறது. என்று ஏங்கினராம். இப்படி ஒரு புராணக் கதை உண்டு. மனித மனமே இப் படித்தான் . அது கடைசி நிலை மனிதனுக இருந்தாலும் சரி, காசு படைத்த குபேர கை இருந்தாலும் சரி, இன்னும் வேண்டும் என்ற வெறி தான் எல்லோருடைய மனதிலும் அக்கினியாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. தமது உடமைகளை வைத்து, தமக்கும் கீழுள்ளவர்களின் நிலமைகளேப் பார்த்து, ஆகா ! நமக்கு இவ்வளவு இருக் கிறதே போதுமே, இதுவல்லவோ நாம் பெற்ற பேறு στ6ύτΩ! எண்ணுபவர்கள் தான் அகம் மகிழ்ந்து வாழ்வார்கள் என்பது தான் மேலே இருக்கும் இரண்டு வரிகள் கூறும் பாடம். நாம் நமக்கு இருப்பதை வைத்துக் கொண்டு திருப்திபடப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லாத பொருளே பெறுவதற் காக உழைக்க முயல வேண்டுமே தவிர, இல்லையே என்று ஏங்கில்ை மகிழ்ச்சி வருமா என்ன ? நெருப்புப்பட்ட பஞ்சு மூட்டையாக அல்லவா வாழ்வு பொசுங்கிப்போகும் !