பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 இளமையில் ஒழுக்கம் என்பது-பேங்கில் பணம் போட்டு சேர்த்துக் கொண்டு வருவது போல.

சேர்க்கின்ற காலத்தில் அழிக்கின்ற ஒருவன், சேர்க்க இயலாத காலத்தில் என்ன ஆவான் ! தெருப் பிச்சைக் காரனாகி திண்டாட வேண்டியதுதான்.

சக்தியை சிக்கனமாக செலவழிக்காமல் இளமையில் கண்டடடி கூத்தடித்துக் காரியம் செய்கின்றவன், முதுமைக் காலத்தே நோயாளியாகவும், கையாலாகாதவனாகவும், உறவக்கும் குடும்பத்துக்கும் சுமையாகத்தான் வாழ முடியும். பிறர் ஏச்கக் கும் பேச்சுக்கு ம் ஆட்பட்டு, இருந்தும் இறந்தவன் போலத்தான் வாழமுடியம்.

அதனால்தான், மேல் நாட்டறிஞர் ஒருவர் கூறுகின்றார் வாழ்க்கை நாற்பதில் தான் ஆரம்பிக்கிறது" என்று.

நாற்பதிலா என்று ஆச்சரியப்படுவது கேட்கிறது. நிமிர்ந்து உட்காருவ து தெரிசிறது. எதிரில் இருட்பவரைப் பார்த்து வினாக்குறி எழுப்புவதும் புரிகிறது. இதையெல்லாம் நான் நன்றாகவே உணர்கிறேன்.

ஆனால். இது ஒரு வேதாந்தம் அல்ல. விண்ணைப் பிடிக்கிறேன், மண்ணைணக் கயிறாசத் திரிக்கிறேன். சுற்றிய துணியை பாம்பாக மாற்றி, சட்டி வைத்திருக்கும் சீரிட்பிள்ளையுடன் சண்டை செய்ய வைக்கப் போகிறேன் என்று தம் டட்டமடிக்கும் வித்தைச்காரன் பேசுகிற விளையாடும் வேடிக்கை வார்த்தைகளல்ல இவை.

உண்மைதான். உலகம் உணர்ந்த உத்தமமான வாழ்க்கை நெறிதான். நமது வாழ்க்கையோ நாற்பதில் தான் ஆரம்பிக்கிறது.

இளமைக் காலமானது எழுச்சிகள், உணர்ச்சிகள் இதய தாகத்தி ன் மலர்ச்சிகள், இனம் புரியாத இவ்வலக