பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11


இன்பத்தின் வளர்ச்சிகள் எல்லாம் உச்சக்கட்டத்தில் ஓங்கி செழித்தோங்கி சிங்காதனம் வீற்றிருக்கின்ற காலம்.

அந்த ஆற்றல்மிகு நேரத்தில், ஆண்மை மிகுந்த காலக் கட்டத்தில் தான். அடக்கம் வேண்டும் . அதனால்தான் வள்ளுவரும். "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" என்று பாடுகின்றார்.

ஆமை தனது நான்கு கால்களையும், ஒரு தலையையும் உள்ளுக்குள் இருத்தி வைத்துக் கொண்டு, கூடாசக் காட்சி யளிப்பது போல, ஐம்புலன்களையும் நாம் அடக் கிக் கொண்டு கட்டுக் கோட்பாக வாழ வேண்டும் என்கிற கருத்திலேதான் ஆமை போல ஐந்தட க்கல் ஆற்றினால், பெருமையெல்லாம் சிறக்கும் என்று பெரியோர்கள் பாடுகின்றார்கள்.

'பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன, மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால் பார்ப்பான் டசுஐந்தும் பாலாய் சொரியுமே"

(திருமூலர்)


ஐம்புலன்களை ஐந்து பசுக்களாகக் கற்பனை செய்து, ஐந்து பசுக்களுக்கும் மேய்ப்பனாக மனிதனேக் கூறி, பசுக்களைப் பக்குவமாகக் காத்து வந்தால் பாலாய் சொரியுமே என்று திருமூலர் பாடுகின்றார்

இதெல்லாம், இவ்வுலகில் நாம் இருக்கும் வரை உடலைக் கா(திருமூலர்)

த்து வாழவேண்டும் என்ற உயர்ந்த கொள்கை என்பதால் தான்.

போகின்ற உடலுக்குப் போர்வை எதற்கு? பாதுகாப்பு எதற்கு? பொறுப்பான ஒழுக்கம் எதற்கு? என்று மாறுதல் பேசி, விறுப்புப் பேசும் மனிதர்களும் உண்டு.