பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 நிலமே கடலுக்குள் மறைந்து போகிறது. கடலே இடம் மாறிப் போகிறது. குன்றுகளே கரைந்து தரையாகின்றன. எந்தப் பொருளுக்கு இந்த உலகில் அழிவில்லை ? நிரந்தர மானது எது ? இறைவனைத் தவிர ! என்றும் பேசுவார்கள்.

இந்த உணர்வு மனதிலே வேண்டும். வாழ்கின்ற காலம் வரை, வளமாக வாழ வேண்டும். உளம் நினைப்பது போல உடல் உறுப்புக்கள் ஒருங்கிணந்து செயல்பட வேண்டும். உடல் உழைக்க வேண்டும், பயன்களே இறைக்க வேண்டும் என்ற நினைவும் வேண்டும்.

இந்தக் கொள்கைதான் இனிமையான கொள்கை.

மனம்போல வாழ்பவர்கள் தங் களது மரணத்தைத் தாங்களே! விரைவில் அழைத்துக் கொள் கின் ருர்கள். தங்களை அழித்துக் கொள்வதோடு, தங்களைச் சார்ந்தவர்களையும். நம்பியிருப்பவர்களையும் கொஞ்சங் கொஞ்சமாகக் கொல் கின்ருர்கள்.

இந்த உடல் பக்குவமும் மனப்பக்குவமும் நாற்பதில்தான் நன்கு அமைகின்றது. வாழ்க்கையைப் புரிந்து கொண்டு வாழும் வகையினை அறிந்து கொண்டு, வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ முற்படும் சமயத்தில், உடல் ஒத்துழைக்காமல் போனல், வாழ்க்கை என்ன ஆகும் ?

வாய்க்கு உணவை விரும்பிக் கொண்டு போகின்ற சமயத்தில், வெடுக் கென்று தட்டி விட்டால் என்ன ஆகும் ? அந்த அவல நிலைதானே உடல் நலிவிலும் உண்டாகும் ?

நாற்பதில் தொடங்குகின்ற வாழ்க்கைதான் நலமான வாழ்க்கை என்று சொன்னுேம். அது நயமான வாழ்க்கையும் கூட, என்றும் சொல்லலாம்.