பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினறில் படபடவெனத் தொடங்கி, இருபதில் 'இருப் பதை எல்லாம் அழித்துவிட்டு, முப்பதில் எல்லாமே முடிந்து போனதாக நினைத்து முடங்கிப் போய், நாற்பதில் சாவே வா என்று நலிந்து புலம் புவோர்களே இன்று நாட்டில் ஏராளமாகக் காணக் கிடக்கின்றர்கள்.

நாற்பதிலே இந்த நிலைமை என்றால், 50, 60,70, 80, 90 என்று வயது காலத்தை கொஞ்சம் கூட்டி நினைத்துப் பாருங்கள் ? மலை உச்சியைப் பார்த்து மலைத்துப் போய் நிற்பது போன்ற மயக்க நிலை தோன்றுகின்றதல்லவா !

இங்கே ஒரு பட்டியலைத் தந்திருக்கிறேன்.

ஒழுங்காக உடலைக் காத்து வந்தவர்கள், ஒழுங்காக வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள். செய்திருக்கும் சாதனையைப் பாருங்கள்.

முது கால் வளைந்து மனதால் குனிந்து, உணர்வால் ஒடுங்கி மூலையிலே முடங்கிப் போய் கிடக்கும் முதிய வயதில், அவர்கள் வ யதின் சோதனை யையும், மீறி, வரலாறு புகழும் சாதனை யை செய்து காட்டியிருக்கின்றார்கள் .

கிரேண்மா மோசஸ் என் பவர். தனது 100வது வயதில் பெயிண்டிங் செய்து புகழ் பெற்றிருக்கிறார்

பெர்ட்ரண்ட்ரசல் என்ற தத்து வஞானி தமது 94வது வயதில், உலக சமாதானத்துக்காக ஓயாது உழைத்து நாடு நாடாகப் பிரச்சாரம் செய்து, வெற்றிக்கொடி நாட்டினர்.

பெர்னுட்ஷா எனும் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், தனது 92 Farfetched fables எனும் சிறந்த நாடகத்தை எழுதிப் புகழ்பெற்ருர்.