பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


ஈமன்டி வேலரா என்பவர் தனது 91ம் வயதில் அயர்லாந்து ஜனதிபதியாக இருந்து சிறந்த தேசத் தலைவராகப் பணியாற்றினார்.

மோ பேக்கர் எடி எனும் மூதாட்டி, தனது 90ம் வயதில் கிறிஸ்டியன் சைன்ஸ் சர்ச் என்பதன் வளர்ச்சிக்கு இயக்கு நராகப் பணியாற்றியிருக்கின்றார்.

கோன்ராடு அடினார் எனும் அறிஞர், ஐெர்மனி பல்கலைக் கழகத்தின் வேந்தராகப் பணியாற்றியிருக்கிறார்.

ஜோகான் உல்ப்காஸ் என்பவர் தனது 88ம் வயதில் Faust எனும் நூலை எழுதி முடித்து அரிய புகழ் பெற்றார்,

எண்பது வயதினரான ஜார்ஜ், பர்னஸ் எனும் நடிகர், "தி சன்ஷைன் பாய்ஸ் எனும் சினிமாவில நடித்ததற்காக அகாதமி விருதினைப் பெற்று விளங்கினார்.

தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி தனது முதிர்ந்த வயதில் உலக அமைதி காகக அமெரிக்கப் பயணம் சென்று அந்நாட்டு அதிபர் கென்னடியை சந்தித்துச் சாதித்த சாதனை கண்டு உலகமே வியந்து போற்றியது.

94ம் வயதிலும்கூட நாளுக்கு ஒரு ஊர். நேரத்திற்கு பல மேடைகளில் பேச்சு என்று, உலகம் சுற்றும் வாலி பராக தந்தை பெரியார் வாழ்ந்த விந்தை வாழ்க்கையை நேரில் நாம் கண்டோம், தம்மையறியாமல் அவரை மதிக்கிறோம் வியக்கிறோம். புகழ்கிறோம். போற்றுகிறோம். ஏன் தெரியுமா ?

வயது என் செய்யும் வளைத்து வயிருறும் முதுமைதான் என் செய்யும் ! மயக்கும் மனநிலையும், கனக்கும் உடல் தளர்வும், காலமும் என்ன செய்யும் ?