பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. வலிமைக்கு வாழ்வு தருவோம்


வான் இன்றி மழையில்லை; வயலின்றி விளைவு இல்லை; ஆனின்றி (பசு) கன்றில்லை; அரியின்றி (சூரியன்) ஒளியில்லை; கோன் (அரசன்) இன்றி காவல் இல்லை; குமரரோ தாயின்றி இல்லை என்று பாடுகிறது நீதி நூல்.

அதைப் போலவே 'வளமையின்றி இளமையில்லை. என்று பேசுகிறது ஒரு பழமொழி.

அதற்கும் மேலே சென்று 'வளமையோடு ஒக்கும் வனப்பில் லே எண் ணின், இளமையோடு ஒப்பதும் இல்’ நான்மணிக்கடிகை என்னும் நூல் இப்படி பேசுகிறது.

இளமையும் வளமையும் வலிமையும் ஒன்றோடு ஒன்றக, இண்டறக் கலந்ததாகத் தான் வாழ்வில் மிளிர்ந்து வருகிறது.

வளம் தான் வலிமையைக் கொடுக்கிறது என்பதால் தான் வாழ்க்கையைப் பற்றிக் கூற வந்த சட்டுடல் துறவி, விவேகாநந்தர் கூறினார். 'வலிமையே வாழ்வு, பல ஹீனமே மரணம்’ என்று.