பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

t


வாழ்க்கைக்கு வலிமை தான் மிக மிக முக்கியம் என்பதை உணராதார் யார் ? அறியாதார் யார் ? இருந்தும் ஏன் இந்த இரண்டுங்கெட்டான் நிலை ?

பலஹீனமான உட லை நம்பி வாழ்வது ஓட்டை விழுந்த படகில் பயணம் செய்வது போலத்தான், வலிமையான தேகமோ பத்திரமான, பாதுகாப்பான, உத்திரவாதம் நிறைந்த, உயர்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கிறது.

மனிதன் என்பதற்கு மற்றொரு பெயர் வலிமை என்றே. கூறுகிறது அகராதி ஒன்று.

வலிமையே மானிடம்; வலிமையே வாழ்வு; வலிமையும் தலமான பயணமும். வாழ்க்கையின் இலட்சியம் என்றே நாம் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள்.தாயும் தாரமும். வாழ்வின் சகல வசதிகளுக்கும், சகல விதமான இன்ப துன்பங்களுக்கும் இருவருமே சாஸ்வதமானவர்கள்.

அவர்கள் இருவரும் ஒருவனே எப்பொழுது விரும்புவார்கள் ? வலிமையோடு இருக்கும் பொழுது தான். அதை எவ்வளவு அழகாக ஒளவையார் பாடியிருக்கிறார் பாருங்கள் !

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் எல்லாரும் சென்றங்கு எதிர்கொள் வார்-இல்லானை

இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்தத்தாய் வேண்டாள் 

செல்லாது அவன் வாய்ச் சொல்.

வலிமை இல்லாதவனே அவனது தாயும் வேண்டாள், அவன் தாரமும் வேண்டாள், அவன் பேச்சுக்கோ மதிப்பே. இல்ல என்று கூறுகிறபொழுது, படிக்காதவனாக இருந்தாலும் கூட , மக்கள் பலரும் எதிர் சென்று அவனே வரவேற்று, வாழ்த்துவார்கள் என்கிறார் அவ்வையார். எப்பொழுது ?