பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


இதற்கான விளக்கத்தை வள்ளுவர் மிக அழகாக காட்டுகிறார் தன் குறள் பாவிலே !

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத் துடையார் (595)

ஒருவர் தாம் தமது கைப்பொருளே இழந்து விட்டோம் என்று அல்லல் படார். அ வt யாரெனில், நிலை பெற்ற ஊக்கம் என்பதை கைப் பொருளாக உடையவர் ஆவார். என்பது அர்த் தமாகும்.

ஊக்கம் என்பதற்கு வலிமை என்று கூறுவார்கள். அந்த ஊக்கம் உடையவரையே உடையவர் என்கிறார் வள்ளுவர்.

ஊக்கம் உள்ளவரிடத்தில் எல்லா ஆக்கமும் நிறைந்திருக்கிறது என்பதினால் தான், கல்லானே ஆனாலும் என்று ஏகாரம் இட்டு, அவ்வை பாடியிருக்கிறார்.

அத்தகைய ஆக்கமும் ஊக்கமும் உள்ளவர் வாழ்வில் தான் நலமும் பலமும நீக்கமற நிறைந்திருக்கும். ஏக்கமான எல்லாவற்றையும் தடுத்திருக்கும்.

கோடி கோடியாகப் பணமும், கும்பிட்டுத் தொழத்தக்கப் பதவியும், வாசனை கலந்த மணப்பொருளால், மயக்கம் தரத் கக்க ஆடை அணிகளும் கொண்டிருந்தாலும், வலிமை இல்லாதவனுக்கு எந்தத் தோற்றததையும் ஏற்றத்தையும் அவை அளிககாது எனபதனால் தான், 'வண்மை இலாளர் வனப்பின்னா' என்று இன்னா நாற்பது பாடிய புலவர் கூறுகிறார்.

அத்தகைய ஆற்றல் மக்க வலிமை எப்படி வரும் ? அரிய முயற்மசியால் தான் வரும். உரிய பியிற்சிகளால தான் சேரும்.