பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தமாக அகலந்து திரிந்து உறங்கும் சோம்பேறிகளுக்கு. வலிமை வரவே வராது.

வலிமையான திடமான மனதிலிருந்து தோன்றும் திவ்யமான சக்தியான, திடமான மனது தான், புறத்தாக்குதல் அனைத்தையும் சமாளித்துப் புறம் தள்ளி வெற்றி கண்ட செம்மாந்த சக்தியாக உருவாகிறது. தினம் தினம் வெளியாகிறது. தீராத வலிவினையும் தருகிறது.

வலிமைக்கு இத்தனை பெருமை என்றால் அதனே வாங்கிக் கொள்ள, ஏந்திக் கொள்ள, வளர்த்துக் கொள்ள, வைத்துக் கொள்ள எத்தகைய மனத்தையும் மாண்பையும் ஒருவர் பெருக்கிக் கொள்ள வேண்டும் ?

சுகமான மனனோநிலையை மட்டுமல்ல, சுகமான நல்ல சூழ்நிலையையும், சுதந்திரமான நல்ல வாழ்க்கையையும் உருவாக்கித்தரும் வலிமையை நாம், ஒரு நாளிலே ஓடிப்போய் பெற்று விட முடியாது.

'இருக்கிறது இளமை என்று வாரி இறைத்து விட்டால் ! இருக்கிறது வலிமை என்று இறைத்துத் தொலைத்து விட்டால்! இருக்கிறது செல்வம் என்று எண்ணி இன்றே அழித்து. விட்டால்! போனது வராது... புலம்பினாலும் திரும்பாது...

இருக்கும் பொழுது இனிக்கின்ற இளமையை, கொழிக்கின்ற வலிமையை , வாராமல் வந்த மாமணி போல பாதுகாத்தக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். பண்பு நிறைந்த செயல்களால், பழுது படாத ஒழுக்கங்களால். பயன் மிகுந்த வழக்கங்களால் பெருக்கிக் கொள்ள முயல வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்.

வலிமை எல்லோர்க்கும் உண்டு.அப்படி வந்து தங்குவது இயற்கையின் இனிய பரிசாகும். பரிசாக வந்ததை பண்புடன் ஏற்று, பாதுகாத்துப், பெருக்கிப் பேரின்பம் அடைவதைவே. வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.