பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25


இதுபழைய வரலாறு என்ருல். நிகழ்காலத்தில் எத்தனே எத்தனை சானறுகள்-

ஆல்பாட் ஒர்ட்டர் என்ற ஓர் அமெரிக்க வீரர். நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தட்டெறியும் போட்டியில் புதிய புதிய சாதனைகள் நிகழ்த்தி, நான்கு தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிருரே!...

விக்டர் சானியேவ் என்ற ரஷ்யா வீரர் மும்முறைத் தாண்டும் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை-மூன்று ஒலிம்பிக் பந்தயங்களில் 12 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கருரே!

பாவோ நர்மி என்ற பின்லாந்து வீரர் -12 ஆண்டுகள் ஒடி, நீண்டதூரப் போட்டிகளில் கலந்து கொண்டு, 12 தங்கப்பதககங்கள் பெற்றிருக்கிருரே...

இதுபோல எத்தனையோ சான்றுகள் உள்ளன .

இவர்கள் இவ்வாறு வலிமை உள்ளவர்களாக விளங்கி உலகுக்கு வழிகாட்டுகின்ருர்களே...

என்ன காரணம்?

உடலை ஒழுங்காகப் பாதுகாத்து, உடற் பயிற்சி செய்து, வலிமையுடன் ஒப்பற்ற வாழ்வு வாழ்ந்ததால் தான் ...

கேட்பதைத் தருவது காமதேனு என்பார்களே. அந்தக் காமதேனு நமது தேகம் தான் என்ருல். ஆச்சரியமாக இருக் கிறதல்லவா!

சேர்க்கின்ற காலத்தில் சேர்த்து வைத்து, சிக்கனமாக செட்டாகப் பயன்படுத்திக் காத்தால், காலம் முழுவதும் குறையாத வலிமையுடன் வாழலாம் என்ற நம்பிக்கையுடன் நாம் நமது பயணத்தைத் தொடர்வோம்! நீ. வ.-2.