பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24


இந்தப் போட்டியில் இந்த முறை ராஜா வெற்றி பெற்று விட்டால் அவருக்கு மீண்டும் அரசபோகம் - அரசியின் அந்தப்புரம்... அத்தனையும் கிடைக்கும்.

தோற்று விட்டால்?...

வெற்றி பெற்ற இளைஞன் ராணிக்குக் கணவனகி விடுவான்.

தோற்ற ராஜாவின் தலை, கோயில் பீடத்திலே வைத்து துண்டிக்கப்படும்.

அந்தத் தண்டனை வேண்டாமென்றல், மலே உச்சியிலி அருந்து கீழே உருட்டித் தள்ளப்படுவார்.

இந்த இரண்டு தண்டனைகளில் ஏதாவது ஒன்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள மாஜி மன்னருக்கு. அரசியின் முன்னுள் கணவருக்கு உரிமையுண்டு.

ராணி எப்பொழுதும் ராணிதான். அவள் இறக்கும் வரை. இப்படி ஒரு கதை.

இந்த அடிப்படையில்தான்; நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன என்பது ஒரு புராணக்கதை.

ஆனால், இந்த நான்கு ஆண்டு வலிமை என்ற நம்பிக்கையை, பல வீரர்கள். வீராங்கனைகள் பொய்யென்று அல்லவா இப்போது மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்ருர்கள். காட்டி வருகின்ருாகள்.

மிலோ என்ற ஒரு மல்யுத்த வீரன். 28 ஆண்டுகள் வரை, எவரும் வெல்ல முடியாத மல்யுத்த வீரனாக அல்லவா விளங்கியிருக்கிருன்,